வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்தலாமா?

0

தற்போது இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் பிரகாரம் வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம் அல்லது கூடதா என்பது தொடர்பில் மக்களிடையே ஒரு தெளிவின்மை ஏற்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தற்போது குறிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சுகாதார விதிமுறைகளின் கீழ் இதை நிகழ்ச்சிகள் உட்பட வெளிப்புற நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்க முடியாது எனும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கருத்தின்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2022 ஜனவரி முதலாம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின் படி, வெளிப்புற நிகழ்வுகள் அனுமதிக்கப்படக்கூடாது என பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் அனைத்து வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கும் ஒலி அனுமதி வழங்குமாறு காவல் நிலையங்களுக்கு கடந்த டிசம்பர் 27 ம் திகதி உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply