நுவரெலியாவாக கட்சியளிக்கும் வவுனியா மாவட்டம் .

0

தற்போது நாடுபூராகவும் பனியுடனான வானிலை நிலவுகிறது.

இந்நிலையில் வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவிலான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர்.

அத்துடன் வவுனியா நகர் புறம் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது.

இதன் பிரகாரம் பாடசாலை மாணவர்கள், வேலைக்கு செல்வோர் வாகன சாரதி என பலரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

மேலும் ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் 7:30 மணி வரை ஒளியைப் பாய்ச்சிய படி சென்றதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Leave a Reply