சென்னையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசும், அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இதற்காக தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோtha தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும் கவர்னர் ஆர். என். ரவி இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில் நாடாளுமன்ற தி மு க தலைவர் டி. ஆர். பாலு தலைமையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்று சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் புறப்படுவதில் ஏற்படும் காலதாமதம் ஆவது குறித்து விரிவாக மனு கொடுத்துவிட்டு வந்தனர்.
இதுகுறித்து சட்டசபையில் நேற்றைய தினம் விரிவாகப் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நாளை கூடி ஆலோசிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த கூட்டத்தில் பங்கேற்க 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



