மார்கழி மாதம் மற்றும் தைப்பூசம் வருவதை முன்னிட்டு முருகன் கோவில்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான ஐயப்பன் பக்தர்கள், முருகன் பக்தர்கள் வருகை தருவார்கள்.
அவ்வாறு பாதயாத்திரைக் காகவும் தினமும் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதன் பிரகாரம் தற்போது நாட்டில் கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடை உத்தரவு இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் நேற்றைய தினம் பக்தர்கள் பெருமளவு குவிந்து சாமி தரிசனம் செய்து கொண்டமை குறிப்பிடதக்கது.



