கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 12 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்றைய தினம் இடம்பெறும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து வகுப்புகளையும் வழமைபோன்று நடப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



