தமிழகத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி திருவள்ளுவர் தினம், 18 – ந்தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம்,26 ஆம் திகதி குடியரசு தினம் என்பதால் மேற்கண்ட நாட்கள் மதுபான விற்பனையில்லா தினங்களாக அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.
இதன் பிரகாரம் மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற பார் கடையினையும் மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்கப்படும்.
அத்துடன் தமிழகத்தில் எதிர்வரும் 9ஆம் திகதியே முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகின்றது.
ஆகவே டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த மாதத்தில் நான்கு நாட்கள் மதுபான கடைகள் அடைக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.



