கடந்த ஆண்டில் மூவாயிரத்துக்கும் அதிகமான சிறுவர் வன்முறை சம்பவங்கள்.

0

கடந்த வருடம் சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பாபில் 3,373 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் அவற்றில் 598 முறைப்பாடுகள் ஐந்து வயதிற்கு குறைந்த சிறுவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் 252 பேர் சிறுமிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு வன்முறைக்கு உள்ளான சிறுவர்களில் 1342 பேர் தனது தந்தையாளும், 718 பேர் தாயாலும் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு ஆசிரியர் மற்றும் அதிகாரிகளினால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான 98 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் 2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் சிறுவர்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 16,395 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன் பிரகாரம் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த சிறுவர் வன்முறை தொடர்பாக 19,768 சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply