வாரியபொல பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம்.

0

வாரிய பல பிரதேச சபையின் தலைவர் பதவியில் இருந்து திலகரத்ன பண்டாரா திசாநாயக்கவை நீக்கும் அதிவிசேஷட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமாகாண ஆளுநர் அட்மிரால் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கடந்த முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திலகரத்ன பண்டார, வாரிய பொல பிரதேச சபையின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply