தென்னிந்திய திரையுலகில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி பின்னர் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகனாக மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.
இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு நிகரான இடத்தில் தன்னை நிலைநிறுத்தி வைத்திருக்கின்றார்.
நாடகங்களை பெரிதாக பின்பற்றும் நடிகர்களில் இவரும் ஒருவர்.
இவர் சில படங்களில் நாடகக் கலைஞராகவும் கதாபாத்திரங்களில் தோன்றி இருக்கின்றார்.
மேலும் தற்போது விஜய்சேதுபதி தெருக்கூத்துக் கலைஞர் என்ற பெயரில் 2022 ஆம் ஆண்டிற்கான கலண்டரை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டிருக்கின்றார்.
இந்த தெருக்கூத்து காலண்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



