அடுத்த வருடத்தில் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அதிரடி மாற்றம்.

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசின் அமைச்சரவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் மறு சீரமைக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அமைச்சரவை மாற்றத்தை ஜனவரி 8ஆம் திகதி நிகழ்த்துவதா அல்லது 18ஆம் திகதி நிகழ்த்துவதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

மேலும் இதன்போது முக்கியமான சில அமைச்சுக்கள் கைமாறவுள்ளதுடன், புதிய சிலருக்கும் வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply