இலங்கைக்கு வந்த சீன பிரஜைகள் சிலர் நாட்டு யுவதிகள் சிலரை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்கின்றனர் .
இந்நிலையில் இவ்வாறு அழைத்துச் சென்று அங்கு தகாத தொழிலாளிகளாக மாற்றிய சம்பவம் தொடர்பாக காவற்துரைமா அதிபர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுள்ளது.
குறித்து விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது , சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 10 இலங்கை யுவதிகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானியொருவர் தெரிவித்தார்.
மேலும் இலங்கை வந்த சீனர்கள் ஏழைக் குடும்பங்களிலுள்ள அழகிய பெண்களை திருமணம் செய்து, பின்னர் அவர்களை சீனாவுக்கு அழைத்துச் சென்று இரவு நேரங்களில் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர் என குறிப்பிடப்படுள்ளது.



