மது போதையுடன் கடமையில் ஈடுபட்ட காவற்துறையினர்.

0

மது போதையுடன் கடமையில் ஈடுபட்ட காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய யாழ் கொடிகாமம் காவற்துறை நிலையத்தை சேர்ந்த இரு காவற்துறை அலுவலர்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் நேற்ற நண்பகல் கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசேட காவல் பரிசோதனையில் குறித்த இருவரும் மதுபோதையில் இருந்தமை தொியவந்துள்ளது.

இதன் பின்னர் அவர்களிடம் சாவகச்சோரி காவல் அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றம் உறுதியான நிலையில் குறித்த இருவரும் மறு அறிவித்தல்வரை பணி நீக்கம செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply