கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட தகவல்.

0

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை 2021 டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இதற்கமைய அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு 2022 ஜனவரி 3 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 2021 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையும்.

மேலும் அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply