கவர்னர் மாளிகை விடுத்த தகவல்.

0

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தொடர்ச்சியாக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இருந்த போது நீட் விலக்கு மசோதா ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

இருப்பினும் இதுவரை இந்த மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதன் பிரகாரம் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழகத்தின் அனைத்து கட்சி எம்.பி. க்கள் குழுவினர் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று சந்தித்து பேச உள்ளனர்.

மேலும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா கவர்னரின் பரிசீலனையில் உள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் முன்னதாக நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து தகவல் அளிக்கும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு பதில் வழங்கிய கவர்னர் மாளிகை நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மதோசா பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply