யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைய குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை காவற்துறை பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் சம்பவத்தில் தெல்லிப்பழை, சூழாம்பதியைச் சேர்ந்த 41 வயதுடைய எட்வேட் மதிவண்ணன் என்ற குடும்பஸ்தரே உயிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



