எரிபொருளின் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்படும் விதம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் பேருந்து கட்டணம் ஆகக் குறைந்தது இரண்டு ரூபாயினால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் போக்குவரத்து அமைச்சு மற்றும் பேருந்து சங்கங்களுக்குடையில் இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 14 ரூபாவாக காணப்படும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 2 ரூபாவால் அதிகரிக்கப்படும்.
அவ்வாறு ஏனைய பேருந்து கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு பேருந்து சங்கங்கள் கடந்த வெள்ளிக்கிழமை கையளித்திருந்தார் யோசனைகள் ஊடாக குறிப்பிடப்பட்டிருந்தன.
இருப்பினும் 7.5 முதல் 10 சதவீதத்துக்கு உட்பட்ட பேருந்து கட்டண அதிகரிப்பை வழங்கவே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



