பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச கூட்டுறவு விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடு பூராகவும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் இன்று முதல் அரசியைக் கொள்வனவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விசேட பொதியில் சீனி கொள்வனவு செய்யாத நுகர்வோருக்கு மேலதிகமாக இரண்டு கிலோ அரிசியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு 1998 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கே குறித்த சலுகை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த சலுகை இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



