தற்போது இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இதன் பிரகாரம் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஜனவரி 3ஆம் திகதி முதல் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கமைய அரசின் வழிகாட்டுதலின்படி ஜனவரி 3ஆம் திகதி தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை சைதாப்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று இந்த தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் இன்னும் நம்பிக்கையுடன் இல்லை.
இந்நிலையில் இந்த தடுப்பூசி இயக்கம் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் .
இளம் பருவத்தினருக்கு ஒரு சிறந்த புத்தாண்டு பரிசு என்று டாக்டர் அரோரா குறிப்பிட்டுள்ளார்.



