எத்தனை ஜென்ம பாவமாக இருந்தாலும் அவற்றை ஒரே நொடியில் கரைக்க வல்லது இந்த பருத்திப்பால்…!!

0

கர்மவினைகளின் மூலம் ஒருவரின் மானம், மரியாதை இழந்து மிகவும் மோசமான நிலைக்குக் கூட செல்ல வேண்டியிருக்கும்.

இது போன்ற நிலைமைகளை சமாளிப்பதற்கும், நமது கர்மவினைகளின் தாக்கத்தை குறைக்கவும் இந்த பருத்திப்பால் பரிகாரத்தை செய்ய வேண்டும்.

அதற்காக முதலில் பருத்திக் கொட்டைகளை வாங்கி கொள்ள வேண்டும்.

அவற்றை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மறுநாள் அவற்றை அரைத்து பருத்திப்பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது. மிகவும் சுத்தமான கலப்படமில்லாத பருத்தி பால் எடுக்க வேண்டும்.

பின்னர் இதனை பூஜை அறையின் முன் வைத்துவிட வேண்டும். பிறகு பூஜை அறையில் அமர்ந்து கண்களை மூடி இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

நான் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிக்க வேண்டும் என்று. பிறகு ஏதேனும் ஒரு பசு மாட்டிற்கு அதன் தலையில் இருக்கும் கொம்புகளையும், பாதங்களையும் தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி விட வேண்டும்.

பிறகு பருத்தி பால் ஊற்றி அதன் கொம்பையும், பாதங்களையும் கழுவி விட்டு, மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, பசுமாட்டை தொட்டு வணங்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பாவங்களின் பலன்கள் குறைந்து, அவற்றின் மூலம் ஏற்படுகின்ற பிரச்சனைகளின் வீரியமும் குறைந்து இனிமேல் உங்கள் வாழ்க்கை இனிமையாக மாறும்.

Leave a Reply