வீட்டில் வேல் வைத்து இல்லாதவர்கள் முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து கொண்டு எதிரி நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, எதிரியால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற வேண்டுதலை முருகப்பெருமானிடம் வைத்து, நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதோ. ‘
ஓம் நமோ பகவதே சரவணபவாய, சண்முகாய, சுப்ரமண்யாய குஹாய நமஹ!’ தினமும் சொல்ல வேண்டும்.
மனதில் எந்த ஒரு கெட்ட எண்ணமும் இல்லாமல் சொல்ல வேண்டும்.
எதிரிகளும் நண்பர்கள் தான் என்ற உணர்வை மனதிற்குள் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
உங்களால் முடிந்த எண்ணிக்கையில் ஒற்றைப்படையில் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
முடிந்தவர்கள் 1008 முறை தினம்தோறும் இந்த மந்திரத்தை தொடர்ந்து, 48 நாட்கள் உச்சரித்தால் கைமேல் பலன் பெற முடியும்.
நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.
