பஞ்சாப் மாநிலத்தில் அடர்ந்த பனி.

0

வட மாநிலங்களில் தற்போது கடுமையான குளிர்காலம் நிலவி வருகின்றது.

இந்நிலையில் அதிகாலையில் எதிரே வருபவர் தெரியாத அளவிற்கு கடுமையான பனி மூட்டமான வானிலை நிலவுகிறது.

இதன் பிரகாரம் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை போட்டுக் கொண்டு செல்கின்றன.

பஞ்சாப் மாநில அமிர்தசரஸ் நகரில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவே வெப்ப நிலை காணப்படுகிறது.

மேலும் இன்று ஒரு டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைந்து காணப்படுவதுடன் அடர்ந்த பனி மூட்டம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடும் குளிர் காற்று வீசி வருவதால் மக்கள் வீடுகள் மற்றும் தங்கும் பகுதி களுக்கு முன்பு தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply