எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை ரூபா 290 முதல் 300 முதல் சந்தையையில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் பெரிய வெங்காயம் ஏற்றிவந்த இரண்டு கப்பல்கள் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பச்சை மிளகாய் உள்ளிட்ட சில மரக்கறிகளின் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மெனிங் சந்தை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் சந்தைக்கு வரும் மரக்கறிகளின் அளவு குறைவடைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.



