கஞ்சாவுடன் நபரொருவர் அதிரடிக் கைது.

0

ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய தெமட்டகொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆரய வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் 30 வயதினையுடைய தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 கிலோ 25 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் முனெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply