தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமானதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை குறைவடைந்து இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
அதிலும் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகின்றது.
இந்நிலையில் வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும், குமாரி கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
ஆகவே எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



