திருகோணமலை – குறிஞ்சா கவனி மிதவ பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த சம்பவம் தொடர்பில் கைதான மிதப்பு பல உரிமையாளர் உட்பட 3 பேரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ். எச். எம் நளீம் கடந்த 10 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



