அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையை 57 ஆக நிதி அமைச்சு மாற்றி அமைத்துள்ளது.
இதற்கமைய குறித்த தகவலை நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். அட்டிகல இன்று அறிவித்துள்ளார்..
அத்துடன் ஓய்வூதிய வயது 60 இல் இருந்து 57 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுத்துறையில் தொடர்ச்சியாக பணியாற்ற விரும்புபவர்கள் 62 வயது வரை பணியாற்றலாம் என்பதால் 5 ஆண்டுகள் பணி நீடிப்பு கோர வேண்டும் என்று நிதி அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐந்து ஆண்டுகால நீடிப்பை விரும்புபவர்கள் ஓய்வு பெற விரும்பினால் மூன்று மாத அறிவிப்புடன் தங்கள் சேவையை முடிக்க முடியும் என்று நிதி அமைச்சக செயலாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.



