இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்.

0

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாத்திரம் 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 16 பேர் மரணம் அடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிபடுத்தியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் இதுவரையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 76 ஆயிரத்து 966 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இது வரையில் குறித்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 14 ஆயிரத்து 677 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply