இந்தியாவில் முதன் முறையாக கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 7.25. லட்சம் பேர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்தக் குழுக்களில் சுமார் ஒரு கோடியே 65 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அத்துடன் இவர்களுக்கு அரசின் சார்பில் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் பிரகாரம் பெண்களின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
இந்நிலையில் இந்த வருடம் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக ரூபா 20,000 கோடி அளவு கடன் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்..
குறித்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மட்டத்தில் இதுவரை ரூபாய் 10 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன..
மேலும் இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி வழங்கும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.



