மிகப்பிரபலமான களனி கங்கை குறித்து வெளியான அதிரடி தகவல்.

0

இலங்கையின் மிகப் பிரபலமான கங்கைகளில் ஒன்றாக விளங்குவது களனி கங்கை ஆகும்.

இதற்கமைய குறித்த கங்கை இலங்கையின் மிகவும் மாசுபட்ட கங்கையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த களனி கங்கையை மாசடைய செய்யும் 1,344 இடங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் களனி கங்கைக்கு கழிவுகள் எங்கிருந்து விடப்படுகின்றது மற்றும் அதனை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் நாம் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றோம் என சுற்றாடல் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply