மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பு ஊசியை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 950,000 ஐ கடந்துள்ளது.
அத்துடன் இதுவரையில் 956,946 பேர் கொவிட் மூன்றாவது தடுப்பூசியையும் செலுத்தி கொண்டுள்ளதாக தொற்றுநோயால் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய நாளில் 19,633 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு நேற்றைய தினம் 17,644 பேருக்கு பைசர் மூன்றாம் தடுப்பபூசி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 868 பேருக்கு பைசர் முதலாம் தடுப்பூசியும் ,220 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
மேலும் 201 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் , 3,677 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



