இலங்கையில் பூஸ்டர் கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 96 ஆயிரத்து 207 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தை தொற்றுநோய்கள் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 59 லட்சத்து, 35 ஆயிரத்து 634 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும், ஒரு கோடியே 37 இலட்சத்து 56 ஆயிரத்து 417 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் 2ஆவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply