ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் இரவு அபுதாபியை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் இன்று காலை பல தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளார்.
அதன் பின்னர் இன்று மாலை இடம்பெறவுள்ள மாநாட்டில் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்கள் என்ற தலைப்பில் தொடக்க உரை நிகழ்த்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



