இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு.

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழுவினர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கடந்த தின பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி தருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த சில காலமாக கோரிக்கை முன் வைத்திருந்தது.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை இந்திய உயர்ஸ்தானிகரமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடாத்தி வந்தனர்.

இதன் பிரகாரம் எதிர்வரும் தினங்களில் இரா சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர் இந்தியாவிற்கு செல்லவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply