ஆசிரியர் சேவை சங்கம் முன்வைத்த குற்றச்சாட்டு.

0

பாடசாலை மாணவர்களின் இந்த வருடத்துக்கான பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சினால் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஆசிரியர்களும் மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த போதிய அளவு காலம் இல்லை என்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமக்குக் கிடைக்க வேண்டிய பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க கோரி கல்வி கூட்டுறவு பொது சேவைகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை எதிர்காலத்தில் மேலும் கடுமையாக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்று டன் 17 நாட்கள் கடந்துள்ள போதிலும் இதுவரையில் எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply