புதையல் தோண்ட முற்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி.

0

புதையல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் திருகோணமலை ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய குறித்த நபர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யபட நபர்களிடம் இருந்து மண்வெட்டி 2, அலவாங்கு 1, சாவல் 2, கேன் போத்தல் 1, தாச்சி 1, பனை 1 மற்றும் மோட்டார் சைக்கிள் இரண்டு போன்றவையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணையின் பின்னர் முதூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் கூறப்பட்டுள்ளனர்.

Leave a Reply