இசையமைப்பாளர் இளையராஜா அளித்த புகார்.

0

காக்கா முட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் மணிகண்டன்.

இந்தப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது.

அதன் பின்னர் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டலை ஆகிய படங்களையும் டைரக்டு செய்துள்ளார்.

தற்போது கடைசியாக விவசாயி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

குறித்த படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவரும், கவுரவ தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.

இறுதியாக விவசாயி படத்துக்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில் படக்குழுவினருக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் படத்திலிருந்து இளையராஜா இசையை நீக்கிவிட்டு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வைத்து படத்தை முடித்து விட்டனர்.

இந்த விடயம் பற்றிய தகவல் இளையராஜாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்கின்றார்.

குறித்த படம் விரைவில் திரைக்கு வருவதை யொட்டி டிரெயிலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த டிரெயிலரில் தனது இசை நீக்கப்பட்டு இருப்பது அறிந்து இளையராஜா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

எனது அனுமதியைப் பெறாமல் இசையை நீக்கியதுடன் இன்னொரு இசையமைப்பாளரை வைத்து படத்துக்கு இசை அமைத்தது தவறு என்று படக்குழுவினர் மீது இசைக் கலைஞர்கள் சங்கத்தில் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply