யாழ்ப்பாணம் , பலாலி , மயிலிட்டி பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மீனவர் ஒருவர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை அவருடைய வலையில் அந்த கை குண்டும் சிக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் பலாலி காவல்துறையினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கை குண்டை மீட்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது



