இலங்கையில் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு.

0

தற்போது நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணத்தினால் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவற்றில் கண்டி, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மண்சரிவு அபாயம் ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply