ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வழங்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது .
இதற்கமைய அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்ஷவினால் அனுமதிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜெயசுந்தர வினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இனிமேல் ஜனாதிபதி சட்டத்தரணியை நியமிக்கும் போது இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



