சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான எழுத்துமூல பரீட்சைகள் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய தமது திணைக்களத்தினால் நடத்தப்படும் எழுத்துமூல பரீட்சைகளுக்கு மேலதிகமாக குறித்த எழுத்துமூல பரீட்சைகளை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த பகுதியில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான எழுத்துமூல பரீட்சையில் பங்கேற்க வாய்ப்புள்ளது.



