அதிகரித்து வரும் டெங்கு நோய் தொற்றாளர்கள்.

0

நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கத்தை விட டெங்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பதுளை பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாணவர்கள் உட்பட மூவர் டெங்கு காய்ச்சல் நோயால் உயிரிழந்துள்ளனர்

இதற்கமைய மேலும் தற்போது வரையில் இந்த டெங்கு நோய் தொற்றால் 261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இரு தினங்களில் பதுளையில் 450 கட்டடத் தொகுதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவற்றில் அரச உத்தியோகத்தர்களின் அரச வீடுகள், அரச நிறுவனங்கள் உட்பட 25 இடங்கள் டெங்கு நுளம்பு பரவும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 261நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply