இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள மேலும் ஒரு தொகை மெட்ரிக் பெட்ரோல்.

0

இன்று 36000 மெட்ரிக் டன் பெட்ரோல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையங்கள் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த கப்பல் இன்று இரவு 8 மணி அளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றிய கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த டீசல் தொகையை கடன் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை முனையங்கள் நிறுவனத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply