இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கோழி இறைச்சியின் விளையும் சடுதியாக அதிகரித்துள்ளது நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கமைய நேற்றைய தினம் ஒரு ஒரு கிலோ இறைச்சி 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் 3 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை மாத்திரம் கொள்வனவு செய்ய முடிகிறதாகவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



