எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு காவல்துறை நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்தது.
இதற்கமைய பெரும்பாலான நீதிமன்றங்கள் காவல் துறையின் கோரிக்கைகளை நேற்றைய தினம் நிராகரித்திருந்தது.
இந்நிலையில் சில நீதிமன்றங்கள் அந்த கோரிக்கையை ஏற்று ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்தன.
இருப்பினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பேருந்து மற்றும் வாகனங்களில் சென்றவர்களை காவற் துறையினர் சோதனையிட்டனர்.
மேலும் நாட்டின் பல பகுதிகளிலும் வீதித் தடைகள் ஏற்படுத்தப் பட்டு பேருந்துகளை திருப்பி அனுப்பியதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.



