நடிகர் சௌந்தரராஜா தமன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது.

0

தமிழ் சினிமா திரையுலகில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் தான் நடிகர் சௌந்தர்ராஜன்.

இவர் சுந்தரபாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகிள், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அத்துடன் நடிகர் சௌந்தர்ராஜா, தமன்னா என்பவரை 2018 இல் மணமுடித்துக் கொண்டார்.

இந்நிலையில் குறித்த தம்பதியினருக்கு நேற்றைய தினம் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறும் சௌந்தர்ராஜா, குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தை பிறந்தது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்தது என்று குறிப்பிடுகின்றார்.

மேலும் மண்ணுக்கும் மக்களுக்கும் அது மதிப்பு கொடுக்கும் சௌந்தர்ராஜா தன் மகளுக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply