கொழும்பு கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய மண்சரிவு அபாய நிலை காரணத்தால் குறித்த பாதை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில்மறு அறிவித்தல் வரை குறித்த பாதை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள்.பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியலாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இன்று காலை கள விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்பு கேகாலை மாவட்ட செயலாளர் மற்றும் மாகாண ஆளுநருடன் கலந்துரையாடினர்.
குறித்த கலந்துரையாடலின் போது இன்று பெறப்பட்ட மேலதிக அவதானிப்புகள் மற்றும் தகவல்களை கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியலாளர் மற்றும் அமைச்சு மட்டத்தில் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டு இதுகுறித்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.



