ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட வேண்டும் என அனுராதபுர மாவட்ட சுதந்திர கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் நேற்றைய தினம் அனுராதபுரத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும் சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் அனுராதபுரம் மாவட்ட செயலாளர் சமன் குமார குறித்த விடயம் தொடர்பான தீர்மானத்தை முன்வைத்துள்ளார்.



