தற்போது தென் அந்தமான் கடல் பரப்புகளுக்கு மேலாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
தற்போது குறித்த காற்றழுத்த தாழ்வு மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடிய சந்தர்ப்பங்கள் நிலவுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதியளவில் வட அந்தமான் கடற்கரைப் பகுதிகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கம் வழுவடையக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
பின்னர் அதனைத் தொடர்ந்தும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18 ஆம் திகதி அளவில் ஆந்திர பிரதேசத்திற்கு அண்மையான கடற்கரையை கடக்கக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
ஆகவே நாட்டிற்கு கிழக்கு பகுதியில் உள்ள ஆழம் கூடிய கடற்கரைகளில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



