யாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் அதிரடி கைது.

0

15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய யாழ் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலை தனித்து நின்ற 15 வயது சிறுமி ஒருவரை காவல்துறையினர் தமது பொறுப்பின் கீழ் எடுத்துள்ளனர்.

இதன்பின் சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதன் பிரகாரம் மேற்படி இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட 19 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply