இன்று சேலம், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை.

0

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது.

இதற்கமைய வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை கரையைக் கடந்துள்ளது.

இந்நிலையில் தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது.

அத்துடன் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவை இழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தொடர் மழை காரணத்தால் சேலம், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு மாத்திரம் என்ற விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் ராணிப்பேட்டை, விழுபுரம் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply